கும்பகோணம், பிப். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

கும்பகோணத்தில் சி.ஐ.டி.யு சார்பில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து  வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் ஈடுப்பட்ட 250 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விரோதமாக செயல் படும்  மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தலைமை அஞ்சலகம் முன்பு பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போராட்டத்தில் பல்வேறு கோரிக்கை முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு, கலால் வரியை நீக்கிட வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் 26,000 வழங்கிட வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பு நான்கையும் கைவிட வேண்டும், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாய கடன்களை அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சாரம், மோட்டார் வாகன புதியசட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் தெரு வியாபாரிகளுக்கு சட்டம் 2015 நடைமுறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும் வேலை நிறுத்தம் மற்றும்  மறியல் போராட்டத்திற்கு சிஐடியு  மாவட்ட தலைவர்  கண்ணன், தலைமையிலும், முன்னாள் மாவட்ட தலைவர்  மனோகரன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், சாலை போக்குவரத்து மாநில பொருளாளர் பார்த்தசாரதி, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஜெயக்குமார், தொமுச மாவட்ட  தலைவர் மாடாக்குடி செல்வராஜ், ஓய்வூதிய சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கலா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், எஐசிசிடியு மாநில குழு உறுப்பினர் ரமேஷ், ஐஎன்டியூசி பேரவை துணைத் தலைவர் வைத்தியநாதன், உள்ளிட்ட ஏஐடியுசி, ஐஎன்டிசி, ஏஐசிசிடியு சங்க தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும் அப் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 250 பேருக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here