கும்பகோணம், ஜன. 7 –

47 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் அதில் அவ்வொன்றியத்திற்கு உட்பட்ட ஏராகரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்ட தார்சாலையில் புல் முளைக்கும் அதியத்தை அவ்வூர் மக்கள் கண்டு மகிழ்வதா ? கண்ணீர் விட்டு அழுவதா என தெரியாமல் திக்கு முக்காடி வருவதாக தெரிவிக்கின்றனர். ஏட்டில் கணக்கெழுதுவதற்கு தார்சாலையா ? தட்டு தடுமாறி விழாமல் செல்வதற்கு சாலையா ? என்றவாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்புவதுடன் ஏனிந்த மக்கள் வரிப்பண விரயம் என்கிறார்கள் அவர்கள்..

ஏராகரம் ஊராட்சியில் மயான கொல்லைக்கு போக சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் கடந்த 20 தினங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. அச்சாலை தரமற்ற வகையில் அமைத்த சாலை என்பதை விட நாத்துக்கு அள்ளி தெளிக்கப்பட்ட நெல்மணி போல் .. தாராயிலில் நனைத்த சிப்ஸ்களை அள்ளித் தெளித்துவுள்ளனர் ஒப்பந்தகாரர்கள் என்கின்றனர் அப்பகுதி மக்கள். மண்ணை அகற்றி பெரிய அளவிலான ஜல்லி போட்டு அமைக்க வேண்டிய சாலை .. பெயர் அளவிற்கு போட்டு கணக்கு புத்தகத்தில் எழுதி வைக்கும் நிலையில் மட்டுமே உள்ளது. என்கிறார்கள் அவ்வூர் மக்கள்..

அதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழையால் தார்சாலை முமுவதும் புற்கள் முளைத்து விளை நிலம் போல காட்சி அளிக்கின்றது. சாலை அமைக்கும் ஒப்பந்தகாரர்கள் பல பேருக்கு லட்சம் கொடுத்து வருவதால்  இப்படித்தான் போட முடியும் என்று கூறுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல கிராமங்களிலும் இப்படித்தான் தரமற்ற சாலையை போட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

குண்டும் குழியுமான சாலை போட்டுள்ளதை பார்த்திருக்கிறோம். இது போன்ற புல் முளைக்கும் அளவிற்கு எந்தவொரு சாலையும் இதுவரை பார்த்த தில்லை என்கிறார்கள். இது குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனடியாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் மேலும், ஆயுட்காலம் குறைவாக உள்ள இச்சாலையை உடனடியாக சீரமைத்து மீண்டும் தரமான சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

பேட்டி : கலைவாணன் ஏராகரம் கிராமவாசி

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here