திருவாரூர், ஏப். 20 –

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய பேருந்து நிலையத்தை நகராட்சிப் பகுதியிலேயே அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் கருத்து தெரிவித்த நிலையில், அவற்றையெல்லாம் புறந்தள்ளி தொடர்ந்து அதற்கான பணிகளை அப்போதைய அரசு முன்னெடுத்தது. இருப்பினும் அப்பணியும் ஆமை வேகத்தில் நடைப்பெற்று அப் புதிய பேருந்து நிலையம் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த தாக அப்பகுதி நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அப்புதிய பேருந்து நிலையத்தில் தற்போது வரை எவ்வித அடிப்படை வசதிகளும் அதில் இல்லையெனவும், மேலும் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் கூட இதுவரை இல்லை என்பது மிகவும் வருத்த த்திற்குரிய நிலை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புறப்படும் பேருந்துகள் நகருக்குள் இருக்கும் பழைய பேருந்திற்கு வந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுமக்களும், வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்த நிலையில், அதுவும் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளதாக மேலும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது புதிய பேருந்து நிலையம் செல்வதே மிகப் பெரும் சவாலாக உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதற்கு அவர்கள் தெரிவிக்கும் காரணமாக அப்புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலை முழுவதும்  அப்போது போடப்பட்ட தரமற்ற சாலையெனவும் மேலும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அத்தரமற்ற சாலை முழுவதும் சிதிலமடைந்து பெரும் பள்ளங்களை அச்சாலை தாங்கி நிற்பதாகவும், மேலும் அதனால் நான்கு, மூன்று மற்றும் இரு சக்கரவாகனத்தில் செல்லக்கூடி அனைவரும் கடும் பாதிப்புக்குள்ளாதாகவும், மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டமுடியாமல் அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்கிக் கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் இதனால் சரியான நேரத்தில் அப்புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகள் செல்ல முடியாமல் பேருந்துகளை தவற விடும் அவலமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுக்குறித்து துறைச் சார்ந்தவர்களிடமும், மேலும் வட்டார மண்டல மற்றும் மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் இதுநாள் வரை மேற்கொள்ளாமல் மெத்தன நிலையை கடைப்பிடிப்பதை கண்டிக்கும் வகையிலும் மேலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புதிய சாலைகளை அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று இந்திய தொழிற்சங்க மையம், சிஐடியு சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு சிஐடியு மாவட்ட தலைவர் அனிபா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர் தஞ்சை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here