திருவாரூர், ஏப். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..

திருவாரூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தினர் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். மேலும் குறிப்பாக நீடாமங்கலம் தாலுக்கா, எடக்கிழையூர் கிராமத்தில் 100க்கும் க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுக்கு பழங்குடி இருளர் ஜாதி வழங்க கோரி தொடர்ந்து போராடி வருவதாகவும், மேலும் அது தொடர்பாக துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்களில் மனு கொடுத்துள்ளதாகவும், குறிப்பாக தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டிஆர்பி ராஜாவிடம் இருள் சமூகத்தினர் பலமுறை மனு அளித்ததாக புகார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் திருவாரூர் மாவட்ட நிர்வாக தரப்பில்  இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், எங்களுக்கு எப்போது பழங்குடி இருளர் ஜாதி சான்றிதழ் வருகிறதோ அப்போதுதான் நாங்கள் எங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை பெற்றுக் கொள்வோம் எனவும், தற்போது அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து விட்டு செல்ல உள்ளதாக தெரிவித்து நேற்று இருளர் சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

பேட்டி .1) பாக்கியராஜ். 2) செல்வராஜ்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here