கும்பகோணம், மார்ச்.25 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்

மேலும் இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்  உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு கல்ளாலான கருடன் மூலஸ்தானத்தில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார் இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெறுகிறது ஆண்டுக்கு இருமுறை பங்குனி மார்கழி பிரம்மோற்சவங்களில் நான்காம் நாள் நிகழ்ச்சியாக கல் கருட சேவை நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டுக்கான பங்குனி தேர்விழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் காலை மாலை என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை வஞ்சுளவல்லி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சீனிவாச பெருமாள் பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். நாளை 10 ஆம் நாளான சப்தாவர்ணத்துடன் இவ்வாண்டுக்கான இவ்விழாவை நிறைவு பெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here