திருவாரூர், மார்ச். 09 –

திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் உள்ள  தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ள பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழாவினை முன்னிட்டு இன்று அவ்வாலயத்தில், கொடிஏற்றம் நடைப்பெற்றதென இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.

உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது.

மேலும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பூமிக்குரிய ஸ்தலமாகவும் விளங்கும் திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழாவிற்காக இன்று காலை ஆலயத்தின் பிரதான பிரகாரத்தில் உள்ள கொடியேற்ற உற்சவம் மிகவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து கொடிமரத்தின் பீடத்தினை சுற்றியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், சந்தனம் முதலான நறுமண திரவியப் பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடைப்பெற்றன. தொடர்ந்து ரிஷபம் படம் பொறிக்கப்பட்ட கொடிக்கு, சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் பங்குனி உத்திரப் பெருவிழா துவக்கத்தை அறிவிக்கும் வகையில்  கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் கொடிமரந்திற்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. இந்த திருவிழாவின் முக்கிய விழாவாக வரும் ஏப்ரல் 1 ஆம்  தேதி உலக புகழ்பெற்ற ஸ்ரீதியாகராஜ சுவாமி 96 அடி உயரம்கொண்ட ஆழித்தேரில் வீதிகளில் வலம் வரும் ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது.

இன்று காலை நடைப்பெற்ற  கொடியேற்ற விழாவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு ஆரூரா தியாகேசா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here