கும்பகோணம், மார்ச். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, நாச்சியார் கோவில் சமுத்துனார் குடி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வாஞ்சிநாதன் 55 இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கோவனூர் வடக்கு தெருவை சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் கண்ணனிடம் தனது நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். அது தொடர்பாக வாஞ்சிநாதனுக்கும் கண்ணனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது.

இந்நிலையில் இன்று வாஞ்சிநாதன் அந்த நிலத்தில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கண்ணனின் சகோதரர் குமார் என்பவர் வாஞ்சிநாதனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றிப்போக அதில் ஆத்திரமடைந்த கண்ணனின் தம்பி  குமார், மண்வெட்டியால் வாஞ்சிநாதனை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வாஞ்சிநாதன் உயிரிழந்துள்ளார்.

அத் தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியார் கோவில் காவல்துறை ஆய்வாளர் சுகுணா, மற்றும் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அக்கொலைக் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் தப்பியோடிய குமாரை பிடித்திட தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். அச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here