கும்பகோணம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசு தலைமை போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் சுமார் 500 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
நகர பேருந்துகள் கிராம பகுதிகளுக்கும், பள்ளி கல்லூரி பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதில் குறிப்பிட்ட வழித்தடமான 58 ஏ அரசு பேருந்து வட மாவட்டத்திற்கு தினமும் 8 தடவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது தூரம் கூட செல்லாமல் வட மாவட்டம் செல்லும் பேருந்து நின்றுவிட்டது. நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பயணிகளிடம் அப் பேருந்தினை தள்ளூம் படிக் கேட்டுக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து அப்பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளும், மற்றும் பொதுமக்களும் அப்பேருந்தினை தள்ளு, தள்ளு என தள்ளுவதைப் பார்த்தால், வடிவேலுவின் திரைப்பட வசனம் நினைவிற்கு வருவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். தற்போது அவ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதனைக் காணும் சமூக ஆர்வலர்கள் தொலைதூரம் செல்லக் கூடிய பேருந்துகளை அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணிபனையில் உள்ள ஒர்க் ஷாப்பில் தாங்கள் இயக்கும் பேருந்துகளை சரிவர பழுது பார்த்து ஓட்டும் கடமைகளில் இருந்து தவறுவதால் ஏற்படும் நிலை என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதனை அரசு உயர் அலுவலர்கள் கண்காணித்து அரசுக்கு பொதுமக்களிடம் ஏற்படும் கெட்ட பெயரை தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.