கும்பகோணம், ஜன. 9 –

கும்பகோணம் அருகே உள்ள சத்திரம் கருப்பூர் முஸ்லிம் தெருவில் எளிய முறையில் 50 பேர் மட்டும் கலந்து கொண்ட இஸ்லாம் மதத்தை தழுவியவரின் நிக்காஹ் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் முஸ்லிம் தெருவில் வசித்து வரும் முகமது ஆரிப் மகன் முகமது அபுதாஹிர் என்பவரின் நிக்காஹ் தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இன்று முழு ஊரடங்கு அமல் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முழு ஊரடங்கு யொட்டி திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த திருமணம் நிக்காஹ் மண்டபத்தை ரத்து செய்து வீட்டில் மணமகன் மணமகள் முக கவசம் அணிந்து உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் 50 நபர்களை வைத்து எளிய முறையில் திருமண நிக்காஹ் நடைபெற்றது. தொடர்ந்து மணமகன் கூறுகையில்… தன்னுடைய வாழ்க்கையில் இது பொன்னான நாள். தங்களுடைய குடும்பத்தினர் மத்தியில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளதாகவும், அனைவரது ஆசிகளும், வாழ்த்துக்களும், தனக்கு தேவை என்றும் வாழ்க்கை பயணத்தை ஒன்றாக இணைந்து இன்று பயணிக்க போவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here