திருவள்ளூர், பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம், பீமன் தோப்பு கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. (40) ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அவர் அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு  கடந்த பிப். 18 ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த குமார், ராமகி்ருஷ்ணன்  ஆகியோர் வந்து சிவக்குமார் (நாயுடு) என்பவருக்கு அம்மை போட்டுள்ளதாவும் அவரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க வேண்டும் என அழைத்துச் சென்றுள்ளனர்.

சுமார் 3 மணி நேரம் கழித்து மீண்டும் பாபு மற்றும் குமார் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் பாலாஜி யை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.  அப்போது பாலாஜியின் தங்கை கற்பகம் என்பவர் உடம்பெல்லாம் அடியாக இருக்கிறதே எனது அண்ணனுக்கு என்ன ஆச்சு என கேடட்தற்கு  குடிபோதையில் கீழே வீழுந்ததாக

தெரிவித்து விட்டு வேறு பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்நேரம் பாலாஜி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வதற்காக உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர்

அதில் பணி புரியும் மருத்துவ உதவியாளர் பாலாஜியை பரிசோதனை செய்த போது  ஏற்கனவே பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜியின் குடும்பத்தார் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.

இந்நிலையில் சிவக்குமார் (நாயுடு) கட்டாயத்தின் பேரில் பாலாஜியின் உடலை 19-ஆம் தேதி சுடுகாட்டில் எரித்துள்ளனர். இது குறித்து பாலாஜியின் உறவினர்கள் தந்தையின் மரணம் குறித்து விசாரித்த போது, பாலாஜி மது குடித்து விட்டு இறக்கவிவ்லை. எனவும் தென்னை மரத்தில் ஏறி கீழே விழுந்து இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். அதனையடுத்து கடந்த 20-ஆம் தேதி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் பாலாஜியின் மகள் இந்துமதி புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இதுவரை அந்த புகார் மீது  எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை என கூறப்படுகிறது. அதனால் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் பகுஜன் பிரேம், மாவட்ட பொதுச் செயலாளர் தேவா, சட்டமன்ற தொகுதி தலைவர் சேலை சுரேஷ், பூண்டி ஒன்றிய செயலாளர் பார்த்திபன், பீமந்தோப்பு பிரம்மையா மற்றும்  கிராம பொது மக்கள்  பாலாஜியின் உறவினர்களுடன்   உயிரிழந்த பாலஜியின் மகள் இந்துமதி சென்று மாவட்ட  ஆட்சியர் பிரபு சங்கரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் என் தந்தையை கட்டாயப்படுத்தி தென்னைமரம் ஏறச்சொல்லி  இறப்பை ஏற்படுத்தியதுடன், மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்ததை   மறைத்த   சிவக்குமார், குமார், ராமகிருஷ்ணன், பாபு மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த ஹரிபாபு ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம என மாவட்ட ஆட்சியரிடம் இந்துமதி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் திருவள்ளூர் எஸ்பி சீனிவாசப் பெருமாளிடமும் இந்துமதி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ் பி தரப்பில் தெரிவித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here