தஞ்சாவூர், ஏப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் பெரியக்கோவிலின் சித்திரை பெருவிழாவின் முக்கிய  நிகழ்வான திருத்தேரோட்டம் எதிர் வரும் இருபதாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அத்திருக்கோயிலின் திருத்தேர் பராமரிப்பு பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியக் கோவிலின் திருத்தேரோட்டம் எதிர் வரும் 20 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருத்தேர் பராமரிப்பு பணி படு தீவிரமாக நடைபெற்றது.

மேலும் தஞ்சாவூரில் அமைந்துள்ள இப்பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி, வராகி, நந்தியம்பெருமான், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், நடராஜர், கருவூரார் உள்ளிட்ட தெய்வங்குள்ளு தனித்தனி சன்னதிகள் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றது. அதனிடையில் காலப்போக்கில் அது நின்றுபோன தேர் திருவிழாவினை மீண்டும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள்  நடத்தினர்.

அதன்பின்பு அத் திருத்தேரோட்டம் நாளடைவில் நின்று விட்டதாக குறிப்பிடப் படுகிறது.  மேலும் 100 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரை தஞ்சை பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2015 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் தேர்திருவிழா தொடங்கி நான்கு ராஜவீதிகளில் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட புதிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தஞ்சை பெரியகோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 6 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.

இந்த தேர் தரையில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை 3 நிலைகளாக 16½ அடி உயரம் கொண்டது. இந்த 3 நிலைகளிலும் மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம்  பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து தேர் அலங்கரிப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று தேர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு சுத்தம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து தேர்ருக்கு வார்னிஸ் அடிக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. மேலும் தேர் சக்கங்களுக்கு கிரீஸ் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here