சோழவரம், செப். 02-

சோழவரம் அருகே உள்ள சிறுணியம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு பின்பு யாகசாலையில் இருந்து புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரினை சிவசாரியர்கள்  கடங்களில் எடுத்து வந்து கோபுர கலசத்திற்கு ஊர் பெரியோர்களின் மன்னிலையில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடைப்பெற்றது.

பின்னர் கும்பாபிஷேகம் செய்த புனித நீரானது திருக்கோயிலை சுற்றி குடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. மேலும் இவ்விழாவின் போது அம்மன் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு தீபராதனையும் சிறப்பு வழிபாடுகளும் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளரும் .பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தார். மேலும் இவ்வூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஊர்மக்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here