கும்பகோணம், மே. 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…

கும்பகோணத்தில் 17 வயது பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அத்திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

அதன் பேரில் காவல்துறையினர் தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக மணப்பெண் வீட்டாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் மூன்று மாதங்கள் இருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து சிறுமி மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் மணமகன் குடும்பத்தினரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுமிக்கு 18 வயது பூர்த்தி ஆவதற்கு முன்பாக மீண்டும் திருமண ஏற்பாடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் வீட்டாரிடம் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

18 வயது பூர்த்தியாகாத நிலையில் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்திருப்பதை அறிந்த இரு வீட்டார் உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் திருமண மண்டபத்தில் டிஜே மியூசிக் மற்றும் ஆடல் பாடல் கொண்டாட்டம் நடைபெற்றது. உறவினர்கள் உணவு சாப்பிட்டு மணமகளுக்கு மெய் வைத்தனர். மணமகள் வீட்டார் மணமகனுக்கு கட்டில்,  பீரோ,  இருசக்கர வாகனம் பாத்திரங்கள் பர்னிச்சர் பொருட்கள் வழங்கிட மண்டபத்தில் அடுக்கி வைத்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here