தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
இந்த தேர்தல் என்பது இலங்கை பிரச்சினை குறித்தல்ல இந்தியாவில் ஜனநாயகம் தொடர்ந்து நிலைக்க வேண்டுமா -வேண்டாமா என்பது தான். எனவே இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தேசிய முன்னனி நிறுவன தலைவர் நெடுமாறன், ஜனநாயக நெறிமுறைகளை முற்றிலுமாக கைவிட்டு விட்டு ஒரு சர்வதிகார ஆட்சியை நிறுவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக தான் அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளின் நடவடிக்கைகள் உள்ளது.
அதனை இந்திய திருநாட்டின் மக்கள் உணர்ந்து இந்த தேர்தலில் விழிப்புணர்வுடன் இருந்து வாக்களித்தால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் வளரும் எனவும், அடுத்த முறை மோடி பெரும்பான்மையுடன் ஜெயித்து ஆட்சி மீண்டும் பிடிப்பார் என்றால் ஆர்.எஸ்.எஸ் நோக்கமான மொழிவாரி மாநிலங்களை அழித்து விட்டு நூறு ஜனபாகமாக மாற்றும் திட்டத்தை நிறைவேற்ற தயங்க மாட்டார்கள் என அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் எங்கள் நிலைப்பாடு எப்போதும் மாறாது எனும் மேலும் அதில் தாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
அதே சமயத்தில் இந்த தேர்தலுக்கு அது பிரச்சனை இல்லை. இந்த தேர்தலுக்கு பிரச்சனை ஜனநாயகம் தொடர்ந்து நிலைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதுதான். முக்கியப் பிரச்சனை அந்த கண்ணோட்டத்தோடு இதை பார்க்கிறோம். அதே நேரத்தில் இலங்கை தமிழ் பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.என்றார். எனவே அது வேறு இது வேறு என அவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.