ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டரி சங்கத்தலைவராக பொறுப்பேற்ற கணேசகண்ணன் மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீருக்கு முக்கியத்துவமும் தனிக்கவனமும் செலுத்துவேன் என உரையாற்றினார்.
ராமநாதபுரம், ஜூலை 21-

ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது. இவ் விழாவில்  தலைவராக பதவி யேற்ற கணேச கண்ணன் தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்னைக்கு ரோட்டரி சங்கம் தனிக் கவனம் செலுத்தி சமுதாய பணியாற்றும் என்றார்,
ராமநாதபுரம் கிழக்குகடற்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் விழா ராமநாதபுரம் டி.பிளாக் ஜி.எஸ்.திருமண மகாலில் நடந்தது. ரோட்டரியின் இன்டர் நேஷனல் உறுப்பினர் ஒலி வண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டரி சங்கத்தின் 2019-2020ம் ஆண்டிற்கான புதிய தலைவராக கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியின் தாளாளர் கணேச கண்ணன் பதவி யேற்றார். தலைவர் கணேச கண்ணன் 2019-2020ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். இதில் செயலாளராக ஜெயகுமார், உடனடி பாஸ்ட் தலைவர் தினேஷ்பாபு, தலைவர் தேர்வு பாபு, துணை தலைவராக மற்றொரு ஜெயக்குமார், இணை செயலாளராக ஜெகன் அகிலன், பொருளாளராக திருமூலர், எடிட்டராக சாகத் இளவரசன், செயற்குழு செயலாளராக தினேஷ்பாபு ஆகியோரும், கிளப் சர்வீஸ் சுகுமார் உட்பட பலர் தேர்வு செய்யப் பட்டனர்.
விழாவில் உதவி கவர்னர் நானா என்ற நாகரத்தினம்,  முகமது மூசா உட்பட பல வி.ஐ.பி.க்கள் பங்கேற்றனர். சாரட்டர் தலைவர் தினேஷ்பாபு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சாரட்டர் செயலாளர் பாபு, கிளப் இயக்குனர் சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய தலைவராக பதவி யேற்ற கணேச கண்ணன் பேசுகையில் ரோட்டரி விதிமுறைக் குட்பட்டு நான் நடப்பேன். சமுதாய பணியாற்றுவதில் தனிக் கவனம் செலுத்துவேன். தற்போது தண்ணீர் பிரச்னை பெரிய பிரச்னையாக உள்ளதால் ரோட்டரி தண்ணீர் பிரச்னைக்கு தனிக்கவனம் செலுத்தி தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தண்ணீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் ரோட்டரி தீவிர விழிப்புணர்வு நிகழ்ச்சி பலமுறை நடத்தினாலும் தொடர்ந்து அதை வழியுறுத்துவோம்.குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்கள் நடக்காத வகையில் ரோட்டரி சமுதாய பணியில் ஈடுபடும் என்பதை இங்கு நான் பதிவு செய்கிறேன். இவ்வாறு பேசினார். பள்ளி முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here