கும்பகோணம், ஆக. 07 –
கும்பகோணம் மாகரத்தில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டு தோறும், பத்து நாட்கள் நடைப்பெறும் பெருவிழா பெருமை வாய்ந்ததாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் அப்பெருவிழா இன்று ப்பகுதியில் நடைப்பெற்றது. அதில், அலங்கார அன்னையின் உருவம் வரையப்பெற்ற புனிததிருக்கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பேராலயத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு மறை மாவட்ட முதன்மைக் குரு அமிர்தசாமி, திருக்கொடியை புனிதம் செய்து ஜபித்த பிறகு, உயர்ந்த கொடிமரத்தில் வானவேடிக்கைகளுடன், மாதா உருவம் தாங்கிய கொடியினை ஏற்றி வைக்கப்பட்டது.
விழாவினை முன்னிட்டு, போராலய வளாகம் முழுவதும் அழகிய பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து முதன்மை குரு தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபட்டனர், விழா நாட்கள் அனைத்திலும் மாலை விசேஷ திருப்பலியும், மறையுரையும் நடைபெறுகிறது, ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில், தூய அலங்கார அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.