திருவள்ளூர், ஆக. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லூர் கிராமத்தில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சி பட்டமந்திரி கூட்டு சாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், தடப்புரம்பாக்கம் ராஜா, காணியம்பாக்கம் தன்சிங், அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், மீஞ்சூர் நகர முன்னாள் திமுக செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டு டாக்டர்.கலைஞர் அவர்களின் புகைப்படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கூடியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு வேட்டிச்சேலை வழங்கினார்.
இந்நிகழ்வில் வல்லூர் பா.து. தமிழரசன், தடப்பெரும் பாக்கம் ஈஸ்வரி ராஜா. உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.