மயிலாடுதுறை, மார்ச். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், சிவராத்திரியை முன்னிட்டு, மயூரநாதர் ஆலயத்தில் நான்கு நாட்கள் நடைப்பெறும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. அதில் பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய, நாடகங்கள் அதனைக் காண வந்த பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, 18-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்றிரவு தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் அக் கலை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள், மங்கள இசையுடன் துவங்கியது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ஆலங்குடி பக்கிரி சாமி குழுவினர் மங்கள இசை உடன் நிகழ்ச்சி துவங்கியது மலேசியாவைச் சேர்ந்த லாசியா ஆர்ட்ஸ் அகாடமி குழுவினர் பெங்களூரு டாக்டர் பூஜா அமல் டாக்டர் பிரார்த்தனா ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

டாக்டர் பிரார்த்தனா, கோவை கிருஷ்ணப்ரியா ஆகியோர் பங்கேற்ற  நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகங்களும் நடைபெற்றது.. சிவதாண்டவம், கைலாயக்காட்சி, திருவிiளாயடல் உள்ளிட்ட தலைப்புகளில் நாட்டிய நாடகங்கள் நடைபெற்றது. மேலும் அதனைக் காண வந்த திரளான பார்வையாளர்கள் அந்நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here