பாண்டிச்சேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் …
புதுச்சேரி வில்லியனரை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்து கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு கீழ் புத்துப்பட்டை சேர்ந்த காளிதாஸ் வயது 26 என்ற நபருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் அதனிடையே கணவன் மனைவி இருவருக்கிடையே போன வருடம் 2023 ஜூன் மாதம் பிரச்சினை வரவே இருவரும்தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையில் காளிதாஸ் அவரிடம் இருந்து தனியாக வாழும் அவரது மனைவியின் புகைப்படம் மற்றும் அவரது செல்போன் எண்ணுடன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ளார்.
அதனால் அவருக்கு பலபேர் போன் செய்து என்னிடம் அவரசிடம் தரக் குறைவாக பேசிவுள்ளனர். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அது சம்பந்தமாக இணைய வழி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டது விசாரணை செய்ததில் கீழ் புத்துப்பட்டை சேர்ந்த காளிதாஸ் என்ற நபர் தான் இதை செய்தார் என்று கண்டுப் பிடித்த பிறகு அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர்தான் என்னுடைய கணவர் தற்போது நாங்கள் பிரிந்து வாழ்கிறோம் என்று காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட காளிதாஸ் என்ற நபரை ஆய்வாளர்கள் தியாகராஜன் கீர்த்தி மற்றும் தலைமை காவலர் இருசவேல் Rozlyn Merie ஆகியோர் தலைமையிலான போலீசார் இன்று தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் முன்னிலையில் ஆஜர் படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் இணைய வழி போலீசார் சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் விசாரணையின் போது இது பற்றி காளிதாசிடம் கேட்ட பொழுது என்னுடைய நண்பர்கள் சொன்னதை கேட்டு இன்ஸ்டாகிராம் ஐடியில் யாருடைய புகைப்படத்தையாவது போட்டு பதிவேற்றம் செய்தால் உன்னை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று சொன்னதால் இப்படி செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக இணைய வழி காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவிப்பது என்னவென்றால் இப்போது இருக்கின்ற நவீன வசதியின்படி இணைய வழியில் நடக்கின்ற அனைத்து குற்றங்களையும் இனைவழி போலீசார் கண்டுபிடித்து விடுவர் ஆகவே இளைஞர்களோ பொதுமக்களோ இது போன்று இணைய வழியில் மற்றவர்களை புகைப்படங்களை மார்க்கிங் செய்தோ அல்லது அவர்களை பழிவாங்க நினைத்தோ வேறு ஏதேனும் காரணங்களுக்கோ இணைய வழியில் செய்தால் நிச்சயம் 100% கண்டுபிடிக்கப்படும் ஆகவே பொதுமக்களும் இளைஞர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.