திருத்துறைப்பூண்டி, மார்ச். 21 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் பாலம் சேவை நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்பு குழு சேவை மையம் தொடக்க நிகழ்ச்சி இன்று நகராட்சி வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்வில் பங்கேற்ற நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அவ் பேரிடர் குழு சேவை மையத்தினை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது கவிதா பாண்டியன் தெரிவிக்கும் போது, பேரிடர் என்பது தவிர்க்க முடியாதது எனவும் ஆனால் முன்னெச்சரிக்கையை கடைப்பிடித்தால் இழப்புகளை தவிர்க்க முடியுமெனவும் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதமாக செய்து வருகிறது. எனவும் மேலும் அக்காலக் கட்டங்களில் நகராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் முகாம்கள் அமைத்தும், வடிகால்களை சீரமைத்தும், குடிநீர் சுகாதாரம், தூய்மை பணி போன்ற அத்தியாவசிய பணிகளை முழுமூச்சுடன் செய்து வருகிறதெனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் தற்போது நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாலம் சேவை நிறுவனம் பேரிடர் கால பணிகளை செய்ய முற்பட்டிருப்பது பாரட்டுக்குரியதெனவும், மேலும், தற்போது பேரிடர் மீட்பு குழு அமைத்துள்ளதற்கும் நகராட்சி சார்பில் பாராட்டுக்களை தான் அக்குழுவினருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில், மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி உரை நிகழ்த்தும் போது, பேரிடர் என்பது தவிர்க்க முடியாதது எனவும், மேலும் ஒவ்வொருவரும் பேரிடர் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமெனவும், மேலும், ஆபத்து காலங்களில் மீட்பு பணிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் பேரிடரிலிருந்து அனைவரையும் பாதுகாத்திட முடியுமெனவும், மேலும் அக்காலக் கட்டங்களில் அரசின் அறிவிப்புக்களே பின்பற்றி நாம் செயல்பட வேண்டும் எனவும், மேலும் தீவிபத்து காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் உதவிட முன் வர வேண்டும் என அப்போது அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேரிடர் மீட்பு குழு செயல்பாடு குறித்து பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் உரை நிகழ்த்தும் போது, திருவாரூர் மாவட்டத்தில் முதன் முறையாக பாலம் சேவை நிறுவனம் பேரிடர் மீட்புக்குழுவை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி தொடங்கியுள்ளதெனவும்,
மேலும், இக்குழுவில் பதினைந்து நீச்சல் மற்றும் மீட்பு பயிற்சி பெற்ற தன்னார்வ இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் இணந்து செயல்படவுள்ளனர் எனவும், மேலும் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மீட்பு உபகரணங்களான நவீன ஒலிபெருக்கி மீட்பு கயிறு, ஸ்ரெட்சர், லைப் ஜாக்கெட், நவீன டார்ச்லைட் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளம், புயல் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை மீட்டு முகாம்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை இக்குழு மேற்கொள்ளும், எனவும், மேலும் மாவட்டம் முழுவதும் மீட்பு குழு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதெனவும், மேலும், இப்பணியில் சேர்ந்து செயலாற்ற ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தங்களை இணைத்து செயல்படலாம் என அப்போது அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சக்திவேல், ரமேஷ்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி, சரவணன், முன்கள மீட்பாளர் கண்ணதாசன், மற்றும் நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பேரிடர் உபகரணங்களின் செயல்விளக்கம் குறித்து செய்து காண்பிக்ப்பட்டது.