தஞ்சாவூர்,பிப்.27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..

தஞ்சாவூர் மாவட்டம், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களாகிய ஜல்லி, எம் சாண்டு, பி சாண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கடந்த 6 மாதங்களாக கடுமையான அளவு உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக கட்டட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக கூறி  கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்கின்ற ஒற்றைக் கோரிக்கையினை வலியுறுத்தி, அகில இநதிய கட்டுனர் சங்கம், கட்டுமான பொறியாளர் சங்கத்தினர், கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் இணைந்து இன்று ஒரு நாள் பணிகளை புறக்கணித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தமிழக அரசே கனிம பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்கின்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி உரத்த குரலில் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here