சிப்காட், மார்ச். 08 –

திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் வாழுதலம்பேடு பகுதியில் ஜித்தன் என்பவரின் மகன் பலராமன் வயது 44 தனது மனைவி சுமதி வயது 40 இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுமதி நேற்று எஸ்.பி.எல். இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சர் நிறுவனத்தில் தேசிய நெடுஞ்சாலை 5 ல் ஆர்.டி.ஒ. அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட வந்த போது, அப்போது, அவ்வழியே எக்ஸ்.எல். இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் பெண்மணியை ஏற்றி வந்த நபர் கவனக் குறைவாகவும், வேகமாகவும் வாகனத்தை ஓட்டி வந்து, வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சுமதி மீது மோதி விபத்தை ஏற்படுத்திவுள்ளார்.

இவ்விபத்தில் சுமதிக்கு பலத்தக் காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை, அக்கம் பக்கத்தினர் அவரை கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விபத்தில் வண்டியில் பயணம் செய்த எலாவூர் பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் மனைவி சின்னப்பொண்ணு வயது 62 மற்றும் கிறிஸ்டப்பா என்பவரின் மகன் ஜெய்சங்கர் வயது 46 ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து நடவடிக்கை எடுக்கும் படி இறந்த சுமதியின் கணவர் பலராமன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here