மயிலாடுதுறை, மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள், நியாய விலை கடை பெண் ஊழியர்களை மாலை 6- மணிக்கு மேல், kyC திட்டத்தில் வீடுகள் தோறும் கைரேகை பதிவிட செல்ல வற்புறுத்துவதை கண்டித்தும், மேலும் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை வகித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 4500 கூட்டுறவு தொடக்க வேளான்மை கடன் சங்கம், மற்றும் நகர கூட்டுறவு கடன் வங்கிகள் மூலம் 32000 நியாயவிலை கடைகள் நடைபெற்று வருகிறது. இந்த நியாயவிலை கடைகளில் பெரும்பாலும் பெண்களே பணியாற்றி வருகின்றனர். அவர்களை K.y.c திட்டத்தின் மூலம், மாலை 6 மணிக்கு மேல் சென்று வீடுகளில் கைரேகை வாங்க வலியுறுத்துவதை கண்டித்தும், மேலும், கடந்த, 10 -10 -23 அன்று வழங்கப்பட்ட 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், காலிபணியிடங்களை நிரப்பிடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here