கும்பகோணம், ஜன. 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகணம் மாநகராட்சியின் வார்டுகளுக்கு உட்பட்ட 33, 34, 35 ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக கடந்த டிச 30 ஆம் தேதியன்று ‘மக்களுடன் முதல்வர்’ என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அம்முகாமில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

கடந்த டிசம்பர் மாதம் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற சிறப்புத் திட்டத்தினை வடிவமைத்து அதில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைகளாக உள்ள 13 துறைகள்ச் சார்ந்து இருப்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து, அதற்கு உடனடித் தீர்வுகாணும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் கோவையில் நடைப்பெற்ற அரசு விழாவில் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் அறிமுகப்படுத்தி வைத்து மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கைகளைப் பெற்றார். மேலும் அதனைத்தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அச்சிறப்பு முகாம் திட்டத்தினை நடத்தி அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது 30 தினங்களுக்குள் ஆய்வு மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு அளித்திட அறிவுறுத்தியிருந்தார் அதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அச்சிறப்பு திட்டமுகாம் நடைப்பெற்று வருகிறது.

அதன் பகுதியாக தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அச்சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. அதுப் போன்று கடந்த டிச 30 ஆம் தேதியன்று கும்பகோணம் தாராசுரம் மாதவன் சீதையம்மாள் மண்டபத்தில், 33,34,35, ஆகிய மூன்று வார்டுகளுக்கு மக்களோடு முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாம் மாநகராட்சி  துணை மேயர் தமிழழகன், தலைமையில் நடைபெற்றது.

அதில் மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இந்த முகாமை ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார், துவக்கி வைத்தார்.  இதில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை, மின்சாரத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here