திருவேற்காடு, சனவரி. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் …

நேற்று நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின்  75 வது குடியரசுத் தின விழாவை போல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் அவ்விழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.

அந்நிகழ்வில் திருவேற்காடு நகராட்சி மன்றத்தலைவரும், திமுக நகரச் செயலாளருமான NEK மூர்த்தி தேசியக்கொடி ஏற்றி கொடிக்கு மரியாதை செலுத்தினார். பின்பு மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் நகராட்சி ஆணையர் கணேசன் நகர மன்ற தலைவர் ஆகியோர் திருவேற்காடு நகராட்சி தமிழ்நாட்டிலேயே முதன்மை நகராட்சியாக வரவேண்டும் எனவும் அம் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அனைத்து வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இரவும் பகலும் உழைத்திட வேண்டும் எனவும், மேலும் நமது பகுதி மக்கள் பணியினை சிறப்பாக செய்து அவர்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக செய்து தர நமது செயல்களை முன்னெடுப்போம் என்றவாறு சூளுரைத்தனர். தொடர்ந்து தனியார்பள்ளி மாணவ,மாணவியர்களின் பேண்டு வாத்தியம் வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவ்விழாவில் உரைநிகழ்த்திய சமூக ஆர்வலர்கள் அனைத்து வார்டு உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு நமது பகுதி வாழ் பகுதி மக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் கேட்டு தீர்த்து வைத்துக் கொண்டிருக்கும் நமது தலைவர் அயராத உழைப்பு போற்றுதலுக்குரியது என அவர்கள் புகழாரம் சூட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆணையர் கணேசன் தெரிவிக்கும் போது உடனடியாக குறைத்தீர் ஆய்வுக் குழு ஒன்றினை அமைத்து அக்குழுவினர் அனைத்து வார்டுகளுக்கும் சென்று அப்பகுதி பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதன் மீது ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் தீர்த்து வைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக ஆணையர் கணேசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு நகர மன்ற தலைவர் மிக்ஜா புயலில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு, பல்வேறு உதவிகளை வழங்கினார் எனவும், மேலும் அப்பகுதியில் தேங்கி நின்ற மழை வெள்ள நீரை உடனுக்குடன் வெளியேற்றுவதில் முக்கியத்துவம் கொடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் என தொடர்ந்து நகர மன்றத்தலைவருக்கு புகழாரம் சூட்டி உரை நிகழ்த்தினார்கள்.

அந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள், சரஸ்வதி தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோருக்கு அவ்விழாவில் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here