ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ச73வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடந்தது. சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசயி கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்கவிட்டார். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின்பு தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்டத் தியாகிகளை கவுரவித்தார். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 37 காவல்துறை அலுவலர்கள், 6 காவல்துறை சார்ந்த அமைச்சுப் பணியாளர்கள்,பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 137 அலுவலர்கள்  மொத்தம் 180 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் மொத்தம் 128 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடயே 84 லட்சத்து 80 ஆயிரத்து 214 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக அஞ்சல் துறையின் மூலம் துாய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து பொது மக்களுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அஞ்சல் அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.

அதன்பிறகு தேவிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் ஏவிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அத்தியுத்து அரசு உயர்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜவஹர் சிறுவர் மன்றம் ஆகிய பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லிமா அமாலினி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர் சுமன், இணை இயக்குனர் (வோண்மை) சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  (பொது) கண்ணபிரான், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், முதன்மை கல்வி அலுவலர் அய்யணன், சமூகபாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கோபு உட்பட அரசுதுறை அலுவலர்கள்,மாணவ மாணவியர்கள், பொது மக்கள் பலர் பங்கேற்றனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில்  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், திரளாக பங்கேற்ற மக்கள் சரமாரியாக கேள்வி

Gram sabha meeting on the eve of Independence Day in Ramanathapuram district

ராமநாதபுரம், ஆக. 16-

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள  429 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி  ஊராட்சி ஒன்றியம் சேதுக்கரை  ஊராட்சியில் மேலபுதுக்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம், ஊரக பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்ககள் குறித்து கிராம மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் வைத்த கோரிக்கைகளில் பிச்சாவலசை கிராமத்தில் பொதுக்கிணறு துார்வாரி சுத்தம் செய்தல், ஊரணியில் கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு மக்கள் பாராட்டுதல் தெரிவித்தனர். தற்போது நடந்த கூட்டத்தில் பஞ்சந்தாங்கி முதல் மேலபுதுக்குடி வழியாக பிச்சாவலசை வரை 2 கி.மீ. துாரத்திற்கு ரோடு செப்பணிட வேண்டும், சேதுக்கரை கடற்கரையை சுத்தம் செய்து பேவர் பிளாக் பதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளனர். கூட்டத்தில் தீர்மானங்களை ஊராட்சி செயலர் சாந்தி வாசிக்க மக்கள் கைதட்டி ஏகமனதாக நிறைவேற்றினர். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உதவியாளர் செல்வி பார்வையாளராக பங்கேற்றார். பணித்தள பொறுப்பாளர் பவானி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here