மயிலாடுதுறை,மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் அருள் பாலித்துவரும் வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயத்தின் 67 ஆம் ஆண்டு காவடி மற்றும் பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிசேக ஆராதனை செய்தனர்.

குத்தாலத்தை அடுத்துள்ளது திருவாவடுதுறை இங்குள்ள வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயம் பால்குட திருவிழா இன்று மிக விமர்ச்சையாக நடைபெற்றது.

பால் குட திருவிழாவை ஒட்டி, காவிரி ஆற்றின் கிளை நதியான வீரசோழன் ஆற்றின் கரையில் ஒருபுறம் வெள்ளை நிற இலைகளுடன் கூடியதும், மறுபுறம் அடர் பச்சை நிறத்தில் உள்ள இலைகளுடன் அமைந்திருக்கும் வெள்ளை வேப்பு மரத்தடியில் அம்மன் எழுந்தருளி உள்ளார்.

இதனால் வெள்ளை வேம்பு மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் 67 ஆம் ஆண்டு காவடி பால்குட திருவிழா  நடைபெற்றது. இதனை முன்னிட்டு மஞ்சள் ஆற்றங்கரையிலிருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் ,அலகு காவடி, அலங்கார காவடி பால்குடங்களுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

விரதம் இருந்த பக்தர்கள் 16 அடி நீள அலகுகளை குத்தியபடி பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று. மேலும் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here