குடவாசல், ஜூன். 14

குடவாசல் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் 39 வது ஆண்டு விழா, மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற மாநில பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா, 75 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா எனும் முப்பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில்  மாநிலத்தலைவர் மாணிக்கம் கலந்து கொண்டு 75 வயது நிரம்பியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி கௌரவ படுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னதாக குடவாசல் முன்னாள்  வட்ட கிளையின் செயலாளர் இராமகிருஷ்ணன் சங்க கொடியினை ஏற்றி வைத்தார்.  வட்டத் தலைவர் செல்லதுரை  இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும், இவ்விழாவில்  ஆண்டு அறிக்கை வாசித்தல்,  வரவு செலவு கணக்கு வாசித்தல் மற்றும் சங்கத்தின்  தீர்மானங்கள் நிறைவேற்றுதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, மாநிலத் தலைவர் மாணிக்கம், மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு,  நாகை மண்டலத் தலைவர் ராஜகோபால், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும், இவ்விழாவில் இதுவரை வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகை ரூபாய் 500 லிருந்து ரூபாய் 1000 ஆக உயர்த்த வேண்டும்.  அதில் வகுப்படுத்தல் இன்றி (ABC ) அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும்.  மருத்துவப் படியை ரூபாய் 300 லிருந்து 1000 மாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று அனைத்து மருத்துவமனைகளிலும் அனைத்து மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் மருத்துவம் பார்த்து அறுவை சிகிச்சை செய்ய அரசு ஆணையிட வேண்டும் என பல தீர்மானங்கள் ஏற்றபட்டது.

பேட்டி: மாணிக்கம் மாநிலத்தலைவர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here