புதுச்சேரி, மே. 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நவ நாட்களில் தினந்தோறும் காலை மாலை என இரு வேலைகளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. ஆண்டு பெருவிழாவின் ஆடம்பர தேர்பவணி இன்று நடைபெற்றது.

முன்னதாக பங்கு தந்தை ஜோசப் பவுல் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் ஜெயராக்கினி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது. அன்னைக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தை சுற்றி தேர் பவனி வர கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி ஊர்வலமாக வந்தனர். இதில் திரளான ஊர் பொதுமக்கள், இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here