தஞ்சாவூர், மே. 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஊராட்சி ஒன்றியம், பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முடிவு நேர்மையற்றதாக இருந்ததாக கூறி அதனை எதிர்த்து  அ.தெட்சிணாமூர்த்தி என்பவரால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மூலம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்திட ஆணை பிறப்பித்துள்ளது.

அவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பாக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்  தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதியின் ஆணையின் பேரில்  பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முடிவினை எதிர்த்து தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அ.தெட்சிணாமூர்த்தி என்பரால் தொடுக்கப்பட்ட தேர்தல் வழக்கில் (வழக்கு எண்.42/ 2020) பதிவான 4 தபால் வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை நடத்திட உத்தரவிடப்பட்டது.

கடந்த 30.12.2019 ம் ஆண்டு நடைபெற்ற பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தேர்தலில் பூட்டு சாவி சின்னத்தில் தெட்சிணாமூர்த்தி   என்பவரும்,  ஆட்டோ சின்னத்தில் விநாயகம் என்பவரும் போட்டியிட்டுள்ளனர்.  அந்தத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 1367, அதில் தெட்சணாமூர்த்தி 659 வாக்குகளும்,  அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விநாயகம் 661 வாக்குகளும் பெற்றுள்ளனர்.  அதனைத் தொடர்ந்து 4 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் அடிப்படையில் விநாயகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வாக்குப்பதிவில் 47 வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவினை அறிவிக்கும்பொழுது தபால் ஓட்டு எண்ணுவதில் தவறு நடந்துள்ளதாக தெட்சிணாமூர்த்தி புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பெயரில்  மறுவாக்கு எண்ணிக்கை நடத்திட 23-5-24 அன்று காலை 11 மணி அளவில் நீதிமன்ற ஆணையர் ராஜபாண்டியன் முன்னிலையில், பட்டுக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில், தேர்தல் நடத்தும் அலுவலர்  மூலம் மறு தபால் வாக்கு  எண்ணிக்கை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here