தஞ்சாவூர், மார்ச்.14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை கிழக்கு காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.3.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
தஞ்சை மாவட்டம், பல்வேறு பகுதிகளில் செல்போன் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப் போது அவைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் காவல்துறையினர் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை கீழவாசல் கரந்தை சி ஆர் சி உள்ளிட்ட இங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் களவு போன செல்போன் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய விசாரணை மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 17 செல்போன்கள் மீட்கப்பட்டு, இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
அதனை தஞ்சை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா உரியவர்களிடம் வழங்கினார். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.