திருவள்ளூர், மே. 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் மற்றும் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், வானியம் சத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு வல்லூர் தேசிய அனல் நிலையத்திலிருந்து உயர் அழுத்த மின் கோபுரங்கள் வழியாக நேரடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.

அங்குள்ள 400 கே. வி. மின் திறன் கொண்ட மின்மாற்றி மூலம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின்விநேகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென மின் மாற்றி வெடித்து தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூர் செங்குன்றம் மணலி மாதவரம் உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரமாக தீயை கட்டுப்படுத்த ரசாயனம் கலந்த நுரையை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அருகே வாணியசத்திரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட துணை மின் நிலைய மின்மாற்றியில் அதிக சத்தத்துடன் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கிய நிலையில், மின்வாரிய ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் எரிவதாலும் கரும்புகை எழும்புவதாலும் கூடுதலாக சென்னை அம்பத்தூர்  மணலி மாதவரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வாகனங்களிள் வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தாமரைப்பாக்கம் வாணியம் சத்திரம் அலமாதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பம் காரணமாகவோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ தீ பற்றி இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுஒரு  மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.  உயர் மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த தீ விபத்து காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில் தீ விபத்து தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வெங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here