பாபநாசம், ஏப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (41) மேலும் அவருக்கு சொந்தமான புதிய லாரி ஒன்று, மதுரையில் இருந்து புதிதாக டீசல் டேங்க் வடிவமைத்து கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த டேங்கர் லாரியை கும்பகோணம் அருகே பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த விவேக் (34) என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த டேங்கர் லாரி சாலியமங்கலம் பாபநாசம் சாலையில் வந்து கொண்டு இருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராத விதமாக வளத்தாமங்கலம் பகுதியில் இரும்பு கடை வைத்திருக்கும் வரதராஜன் என்பவரின் கடையின், முன்புயிருந்த மும்முனை மின்சார கம்பத்தின் போஸ்டரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.

அதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் ஓட்டுனரும் லாரியின் உள்ளே பயணம் செய்த  இருவரும் உயிர் தப்பினர். மேலும் அத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்சாரவாரிய அதிகாரிகள்  உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் அவ்விபத்துக் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here