தஞ்சாவூர், ஏப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காத பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை கண்டித்து தமிழ் பல்கலைக்கழக ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த மாதம் வரை ஓய்வு பெற்ற ஊழியர் அனைவருக்கும் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஓய்வூதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும் மேலும் ஓய்வூதியம் தொடர்பாக துணைவேந்தரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு சமூக தீர்வு  எடுக்கப்படவில்லை எனவும், ஓய்வூதியம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை எனவும் ஓய்வூதியர் நிலை பணியாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது வரை ஓய்வூதியம் தொடர்பாக எந்த ஒரு முடிவும் எட்டப்படாததைக் கண்டித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பணியாளர்கள் ஆகியோர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை முன்பு துணைவேந்தர் திருவள்ளுவனை கண்டித்தும் மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர பதிவாளர் இல்லாததே இதற்கு காரணம் .நிரந்தர பதிவாளரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும், ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here