கும்பகோணம், ஏப். 01 –

கும்பகோணம் அருகே உள்ள மண்டகமேடு என்ற குக்கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடி  மக்களின் குழந்தைகளுக்கு இருளர் பழங்குடி சாதி சான்றிதழ் இன்று அவர்களின் வீடு தேடி வழங்க உத்தரவிட்டார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அதனைத் தொடர்ந்து அவர்களது வீடுகளில் வழங்கப்பட்டது.

வேளாண்மை பாதுகாப்புச் சார்ந்த பாம்பு  மற்றும் எலி பிடித்தல் போன்ற வேலைகளை முக்கயமாக கொண்டு தொழில் செய்து வாழ்பவர்கள் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் 45 குடும்பங்கள் கும்பகோணம் அருகே மண்டகமேடு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களது  குழந்தைகள் பல்வேறு பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை சாதிச் சான்று வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து இவர்கள் தங்களுக்கு இருளர் பழங்குடியினர் ஜாதிச்சான்று வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.

ஆட்சியரின் கவனத்திற்கு வந்தவுடன் இவர்கள் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து கும்பகோணம் கோட்டாட்சியரிடம் விசாரணை நடத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கும்பகோணம் கோட்டாட்சியர் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இவர்கள் அனைவரும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.

கோட்டாட்சியர் அளித்த அறிக்கை ஏற்கப்பட்டு அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று மண்டகமேடு கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களின் 16 குழந்தைகளுக்கு இந்து இருளர் பழங்குடி சான்றிதழ்களை மண்டகமேடு கிராமத்தில் அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று நேரிடையாக 16 மாணவ, மாணவியர்களிடம் இந்து இருளர் பழங்குடி சாதிச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் நேரிடையாக வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here