ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரத்தில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,  மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் வெகு சிறப்பாக நடந்தது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம்  தமுமுக மாநில செயலாளர் தொண்டி  M.சாதிக் பாட்ஷா  தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க தமுமுக மமகவின் ஒருங்கினைந்த  மாவட்ட பொதுக் குழு  கூட்டம் நடை பெற்றது .உலாமக்கள் அணி நிர்வாகி ஹாபில் முகம்மதுபாசீல் நூரி  குர் ஆன் விளக்கம் ஓதினார்.

மாவட்ட பொறுப்பு தலைவர்  பட்டானி வரவேற்றார்.    மீனவர் அணி மாநில பொருளாளர்  செரிப்  புதுமடம் முஸ்தபா .மாநில செயற்குழு உறுப்பினர் புதுமடம் இப்ராஹீம்  பனைக்குளம் ரஷீது,   மேற்கு மாவட்டத் தலைவர் இக்பால் தமுமுக செயலர் முகிதுல்லாஹ். மமக செயலர்  தாஜ் முகமது  காஞ்சி ராங்குடி இப்ராஹீம் பாய்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

பொதுக்குழு கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது சிறப்பு அழைப் பாளராக பஙகேற்று பேசியதாவது:

மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்துக்கேட்பு நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் 2019 – 2020 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அதை அமுலுக்கும் கொண்டு வந்துவிட்டது. மோடி அரசின் இந்த நடவடிக்கை கல்வித்துறை எதிர்கொள்ளப் போகும் அபாயத்திற்கு ஒரு சான்று.

தேசிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கவில்லை . மாறாக, ஆர்.எஸ்.எஸ் சார்ந்த கல்வி அமைப்புகள் மற்றும் தனியார் பள்ளி/கல்லூரி நிறுவனங் களின் கூட்டமைப்பு, CII, FICCI, NASCOM முதலாளிகள் சங்கம் போன்ற வைகளிடம் மட்டுமே கருத்து கேட்டு தயாரித்துள்ளனர். இதிலிருந்தே இந்த கல்விக் கொள்கை யாருடைய நலனுக்காக தயாரிக்கப் பட்டுள்ளது என்பதை உணர முடியும்.

தேசிய கல்விக் கொள்கையிலே, 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு; 8 –ம் வகுப்பிலிருந்து கட்டாய தொழிற் கல்வி; பள்ளிப் படிப்பிலிருந்து உயர்கல்வி வரை இந்தி – சமஸ்கிருத திணிப்பு; கல்வி மீதான மாநில அரசின் அதி காரத்தை பறித்து பிரதமர் தலைமை யிலான தேசிய கல்வி ஆணையத் திடம் ஒப்படைப்பது; B.A.,B.Sc உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி படிப்பு களுக்கும் தேசிய அளவிலான தகுதித்தேர்வு; கல்விக் கட்டணம், ஆசிரியர் நியமனம், புதிய கல்லூரிகள் ஆரம்பிப்பது ஆகியவற்றிக்கு அரசின் ஒப்புதல் தேவை யில்லை, கல்லூரி நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம்; திறமை அடிப் படையில் ஆசிரியர் பணி நியமனம்; டாடா, அதானி, அம்பானி, பில்கேட்ஸ், மார்க் சுகர்பர்க் போன்ற ‘தனியார் கொடை வள்ளல்கள்’ கல்வித் தொழில் தொடங்க முன்னுரிமை; தனியார் கல்லூரி களையும் அரசு கல்லூரி களையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந் துரைகளை வரைவு அறிக்கை முன் வைத்துள்ளது.

இப் பரிந் துரைகளின் நோக்கமே கல்வி கொடுக்கும் பொறுப்பில் இருந்து அரசின் பங்களிப்பை முற்றிலும் நீக்குவதுடன், ஒட்டு மொத்த இந்திய கல்வி சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப் பாட்டின் கீழ் ஒப்படைப் பதும் அதற்கு தகுந்த நிர்வாக கட்டமைப்பை உருவாக்கு வதுதான்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின் கொள்கை யாகும்,

பெரும் பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நவீன குலக் கல்வியை திணிக் கின்ற, கல்வியை முற்றிலும் வணிக மயமாக்கி நிதி மூல தனங்களின் கொள்ளைக் காக வழிவகை செய்கின்ற தேசிய கல்விக் கொள்கையை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, நிராகரிக்க வேண்டும்.

பெரும் பான்மை மக்களின் நலனுக் கான கல்விக் கொள்கை யை கல்வியா ளர்கள், பேராசிரி யர்கள், மாண வர்கள் இணைந்து உருவாக்க வேண்டும். இந்த சனாதன கல்விக் கொள்கையை எதிர்த்து
தமிழகம் தழுவிய அளவில் த.மு.மு.க மனிதநேய மக்கள் கட்சி பெரும் மக்கள் திரள் ஆர்பாட்டங் களை நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில அமைப்பு செயலாளர் ஹூசைன் கனி,  மாநில துணை பொது செயலாளர் மதுரை முகம்மது கவுஸ், தமுமுக மாநில செயலாளர் கோவை சாதிக் ஆகியோர்  சிறப்புரை நிகழ்த்தினர்

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு:

அனைத்து கிளை, ஒன்றியம், பேரூர், நகரம் மற்றும் அனைத்து நிர்வாகிகள் சிறப்பு அழைப் பாளர்கள் கலந்து கொண்டனர்   பொதுக் குழுவில் தேர்ந் தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள்தமுமுக மமகவின் மாவட்ட தலைவர்  ஆனத்தூர் பட்டானி மீரான், தமுமுகவின் மாவட்ட செயலாளர்
தொண்டி வக்கீல்   ஜிப்ரிமமகவின்  மாவட்ட செயலாளர் கீழக்கரை
முஜிபூர் ரஹ்மான்தமுமுக மமகவின் மாவட்ட பொருளர் பனைகுளம் பரக்கத் துல்லாஹ்,  தமுமுக துனை தலைவர் முகவை அப்துல்லாஹ், தமுமுக செயலார் மேலபுதுக்குடி  ரைஸ் இபுராஹிம், முகவை சாகுல் ஹமிது, தங்கச்சிமடம் ஆசிக், மமக துனைச்செயலர் தேவிபட்டனம் சுல்தான், .இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலர் தாஹிர் சைபூதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகவை யாசர், ஊடக பிரிவு மாவட்டச் செயலாளர் பிச்சா வலசை யாசர் அராபத், ஆகியோர் நிர்வாகி களாக தேர்வு செய்யப் பட்டு பொறுப் பேற்றுக் கொண்டனர் .
இராமநாதபுரம் நகர் தமுமுக மமக சார்பில் மாற்று திறனாளிக்கான உதவியை  மண்டபம்தமிம்  என்பவருக்கு   ஆட்டோ  வழங்கப் பட்டது.  தமுமுக மமக நகர்  நிவாகிகள்  அப்துல்ரஹிம் தமிம். பாபு  சுலைமான் .யாசர்  ஆகியோா் பொதுக்குழுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் .கூட்டத்தில்,  தமுமுக தொடங்கி 25 வது வெள்ளி விழா ஆண்டை சிறபிக்கும் வகையில் இரத்த தான முகாம் மற்றும் மருத்துவ சேவை செய்த வர்களுக்கு பாராட்டு விழா ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது.
தமுமுக மாவட்ட செயலாளர் வக்கில்  ஜிப்ரி நன்றி கூறினார்..  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here