சென்னை, ஆக. 05 –
உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு, எதிர்வினை அளித்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளப் பதிவில், தமிழ்நாடு தலையாட்டும் பொம்மையல்ல எனவும், மேலும் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழை தொன்மையான மொழி என்று தேன் தடவுவதும், டெல்லிக்கு சென்றவுடன் நஞ்சைப் பரப்புவதும் பாஜகவின் பசப்பு அரசியல் என்பதை அறிவோம் என முகவும் காட்டமாக பதிலடி அளித்திடும் வகையில் அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தி திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடாக உள்ளிட்ட பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிவுள்ளதை, மாண்புமிகு உள்துறை அமைச்சர் உணர வேண்டுமெனவும், மேலும் 1965 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மொழிப் புரட்சி காலத்தினை உருவாக்கி விடாதீர்கள் என எச்சரித்தும் பதிவிட்டுள்ளார்.