மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் அம் மாவட்ட விவசாயிகளுடன் நடைப் பெற்ற கலந்தாய்வு கூட்டத்தின் போது எடுத்தப் படம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் தமிழக முதல்வரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் குறித்து நேற்று பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரும் மராமத்துப் பணிகள் சிறப்பு அலுவலருமான பாலாஜி மற்றும் அம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் ஆகியோரும் அப்பகுதி விவசாயிகளிடம் கலந்தாய்வும், மற்றும் பணிகள் நடைப்பெற இருக்கும் இடங்களை நேரடியாகச் சென்று ஆய்வுகளையும் நடத்தினர் .
இராமநாதபுரம் ; ஜூலை, 05-
முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் உள்ள கண்மாயினை நேரடி பார்வை செய்து ஆய்வு நடத்திய போது எடுத்தப் படம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் நீர் பிடிப்பு பகுதிகளில் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் நடைப் பெற வேண்டிய இடங்கள் குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கலந்தாய்வும் நீர் தேக்கப் பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு நடத்தும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று தமிழக அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரும் குடிமராமத்து பணிகள் சிறப்பு அலுவலருமான பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவராவ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அம்மாவட்ட விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற் கொண்டனர். அக்கூட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளான கண்மாய்களின் தற்போதைய நிலைகள் குறித்தும் தற்போது மேற்படவேண்டிய மராமத்து புனரமைப்பு பணிகள் குறித்து விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். பின்பு இம்மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் பணிகள் நடைப்பெற உள்ள கண்மாய்களை நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினர் . இவ்வாய்வு பணிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி ,பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன் உடன் இருந்தனர் .