சென்னை, பிப். 19 –

தமிழகமெங்கும் திரையரங்குகளில் பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளி வரயிருக்கும் ‘குற்றம் புரிந்தால்’ தமிழ் திகில் திரைப்பட அனுபவம் குறித்து அப்படத்தின் நாயகன் ஆதிக்பாபு சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது மனம் திறந்து பதிலளித்தார்.

கேள்வி – இப்படக்கதையை எவ்வாறு தேர்வு செய்து நடிக்க முன் வந்தீர்கள் மேலும் இப்படத்தில் உங்களுக்கு பிடித்த சிறந்த காட்சி எது?

பதில் – ஒரு படத்தின் அனைத்து காட்சிகளுமே முக்கியமானதும் சிறப்பு வாய்ந்த்தும்தான். இதில் சிறந்த காட்சி என்று எப்படி பிரித்துச் சொல்வது. மேலும், கதையை எப்படி தேர்வு செய்யப்படுகிறது மேலும் அதனை எப்படி தயாருக்கின்றேன் என்று கேட்டால், பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை எது தூண்டுகிறது என்பதையும், அக்கதாப் பாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நடிப்பின் மூலம் எப்படி வெளிப்படுத்துகிறது. என்பதைக் கண்டறிகிறேன். மேலும் அந்த கதாப்பாத்திரம் மற்ற கதாபாத்திரத்துடன் எதைப் பகிர்ந்து கொள்கிறது மேலும், கதாபாத்திரத்திற்கான யதார்த்தத்தை உருவாக்க, என் சொந்த குணாதிசயங்களையும் அனுபவங்களையும் பயன்படுத்த முடிகிறதா என்பதை அறிந்தே கதைகளை தேர்வு செய்கிறேன் என்றார்.

 

கேள்வி – இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தடைகள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் ஏதாவது உண்டா இருப்பின் அதுப்பற்றிய தகவல்களை இத்தருணத்தில் பகிர்ந்துக் கொள்ள முடியுமா ….

பதில் – இப்படத்தின் படப்பிடிப்பின் போது தடைகள் எதுவும் இருந்தது எனச் சொல்ல முடியாது, கஷ்டபட்ட காட்சிகள் பற்றி சொல்லலாம், படத்தில் ஒரு தெருவில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய வரும் போது, அவர் என்னிடமிருந்து தப்பித்து சண்டையிடுவார்.

அப்போது அச் சண்டை காட்சியின் போது, எனக்கு நிஜமாகவே அடி விழுந்திருந்தது. ஆனாலும் அதைப்பற்றி நான் இயக்குனரிடம் காட்டிக்கொள்ளாமல் முழு இரவும் நடித்து முடித்தேன்.

கேள்வி – உங்களின் சக நடிகர்கள் மற்றும் குழுவின் ஆதரவு பற்றி?

இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் அவங்களுடைய காதப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்தார்கள், அதில் குறிப்பாக எம்.எஸ். பாஸ்கர் பற்றி கூறவேண்டும் இப்படம் குறித்து எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுத்தார். அபிநயா அவங்களால பேச முடியாதே தவிர, அவர்களுடைய நடிப்பு சிறப்பு, எனக்கு ஹீரோயினோட ஒரு லிப்லாக் காட்சி இருக்கு, எனக்கு ரொம்ப பயம் வந்துருச்சி, பின் இயக்குனர் வந்து அந்த காட்சியை எனக்கு எடுத்து சொல்லி ஒரு வழியாக என்னை நடிக்க வைத்தார்.

கேள்வி : குற்றம் புரிந்தால் திரைப்படத்தை ஏன் திரையரங்குகளில் பார்க்க வேண்டும்?

பதில்: “குற்றம் புரிந்தால்” ஒரு பழிவாங்கும் க்ரைம் திரில்லர் திரைப்படம். இந்தப் படத்தின் கதைக்களம் சமூகப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டது. நீதிக்காக சீரழிந்த அமைப்புக்கு எதிராக தனி மனிதன் போராடுவதை அழகாக இப்படத்தில் சித்தரிக்கப் பட்டுள்ளது. அது இப்படத்திற்கு அனைவரையும் ரசிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் செய்யும் என நான் கருதுகிறேன். என்று தனது பிசியான செட்யூல்களுக்கு இடையே நமக்கு நேர்காணல் அளித்த அவருக்கு இத்திரைப்படம் பெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கூறி விடைப்பெற்றோம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here