கும்பகோணம், ஜன. 19 –

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூரணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கரும்புவிவசாயிகள் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் கோட்டாச்சியர் வெளி நடப்பு செய்தார். இதனால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இன்று கும்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள் கூட்டத் தொடக்கத்திலேயே திருமண்டங்குடியில் செயல் பட்டு வரும் திருஆருரான் சர்க்கரை ஆலையில் ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்துயிருந்த கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்திருந்தது.

மேலும், பல்வேறு விவசாயிகள் பெயரில் பல்வேறு வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் பெற்று பயனடைந்து அந்த கடனை திரும்ப செலுத்தாததால், அதுவும் விவசாயிகள் அக்கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலையும் விவசாயிகள் தலையில் விழுந்தது,

இந்நிலையில் கடந்த 2017ல், இந்த ஆலை நலிவுற்றதாக கூறி, திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் அதனை மூடினார்கள். இந்நிலையில் தங்களுக்கு தர வேண்டிய கடன் நிலுவைத்தொகை தர வலியுறுத்தி அவ்வாலைக்கு எதிராக அந்நாளில் இருந்து பல்வேறு தொடர் போராட்டங்களை அவ்வாலையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் ஒன்று கூடி நடத்தி வந்தனர்.

மேலும் நலிவுற்றதாக கூறி மூடப்பட்ட சர்க்கரை ஆலையை சமீபத்தில், கால்ஸ் டிஸ்லரீஸ் எனும் தனியார் நிறுவனம் விலைக்கு வாங்கியது.

அவ்வாலையை விற்றப்பிறகும் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஏமாற்றியும், காலம் தாழ்த்தியும் வந்த ஆரூரார் சர்க்கரை ஆலையை கண்டித்தும், நிலுவைத்தொகையை திரும்ப தர வலியுறுத்தியும் கடந்த 51 நாட்களாக போராடிவரும் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பதாலும்,

மேலும், ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது போல தமிழக அரசே சர்க்கரை ஆலையை ஏற்று நடத்த வேண்டும். எனவும் மேலும், கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பியதால் கோட்டாட்சியர் பூர்ணிமா எந்த பதிலும் தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்ததார். இதனால் அவ்வலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. அதனைத்தொடர்ந்து விவசாயிகளும் தொடர் முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் மயான அமைதியுடன் கூடிய பரபரப்பு நிலவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here