திருவாரூர், மே. 08 –  

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில்.. கோடை பயிரான பருத்தி பெரும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதிகளில் சுமார் 15,000 ஏக்கர் அளவிற்கு பருத்தி பயிர் மழை நீரினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் பருத்தி பயிரிட 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவான நிலையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்த மழையினால், பருத்தி காய் விடும் நிலையில் பூக்கள் உதிர்ந்து பெரும் பாதிப்படைந்துள்ளது. இதனால் பருத்தி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும், இப்பாதிப்புக் குறித்து அப்பகுதி முன்னோடி விவசாயிகளும் மற்றும் விவசாய நலச்சங்கத்தின் மாவட்டத்தலைவருமான சேதுராமன் மற்றும் விவசாயிகள் சித்ரா புளிச்சக்காடி விவசாயியான அசோக் ஆகியோர் தெரிவிக்கும் போது, மழையினால் பாதித்த பருத்தி பயிர்களை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு பாதிப்படைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

பேட்டி: 1.சேதுராமன் மாவட்ட தலைவர் விவசாய நலச்சங்கம்

2.சித்ரா

3.அசோக் புளிச்சக்காடி விவசாயிகள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here