குத்தாலம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் அமைந்து மிக பழமை வாய்ந்த ஸ்ரீ சிரசாயி மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அவ்விழாவினை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழகு காவடிகள் புறப்பட்டு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்பு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு உளம் மகிழ்ந்தனர்.