கும்பகோணம், மே. 03 –

ஆண்டில் வரும் மாதங்களில் சிறந்த மாதமாக  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால்  வழங்கப்பட்டதும் இந்த மாதம்  என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

புனித ரமலான் மாத நோன்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று  ரம்ஜான் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு சாந்தி நகர் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நகர பொருளாளர் ஹாஜா மைதீன்  தலைமையில்  நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புத்தாடைகள் அணிந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here