பொன்னேரி, ஆக. 14 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளின் சிறப்பு மாநாடு தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.

மேலும் இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கே எனவும், மேலும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைக்கவும், மற்றும் அக்கோரிக்கைகள் குறித்து இச்சிறப்பு மாநாட்டின் வாயிலாக அதனை தீர்மானங்களாக ஏற்றி அவ்விரு அரசுகளும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுத்திடவும் இச்சிறப்புமிகு மாநாடு நடத்தப்படுவதாக அம்மாநாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அச்சிறப்பு மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்கள் பின் வருவன –

நெல் குவிண்டால் 1க்கு ரூபாய் 3000 வழங்கிட வேண்டும்.

கரும்பு டன் 1க்கு ரூபாய் 5000 வழங்கிட வேண்டும்.

மழையால் சேதம் அடைந்த பச்சை பயிறு, எள், வேர்கடலை, தர்பூசணி மற்றும் சிறு தானியங்களுக்கு உண்டான நிவாரணம் வழங்கிட வேண்டும்.

உரிய காலத்தில் காப்பீடு வழங்கிட வேண்டும்.

ஆரணி ஆறு- மாம்பாக்கம் எல்லை பகுதியில் உடனடியாக தடுப்பணை அமைத்திட வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பதம் 20% சதவீதத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இச்சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றியதுடன், மேலும் விவசாயிகளின் சார்பில் அரசினை நிறைவேற்றித்தர வலியுறுத்தும் இக்கோரிக்கைகளால் தற்போது வரை விவசாயிகள் எவ்வாறு எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து அம்மாநாட்டில் விவசாய சங்க முன்னோடிகள் மிக விரிவாக எடுத்துரைத்து உரை நிகழ்த்தினார்கள்.

மேலும், தச்சூர் சித்தூர் ஆறுவழிச் சாலையை அப்பகுதியில் வேளாண்மை செய்து வரும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பில்லாமல் மாற்று வழியில் அமைத்திட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இச்சிறப்பு மாநாட்டில் சுமார் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மாநாட்டிற்கு பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 நிலத்தை அபகரிக்கிற விவசாயிகளை கேட்காமலேயே நிலத்தை கைப்பற்றுகிற சட்டத்தை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் எந்த கட்சியின் விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையே அழிக்கும் பேராபத்தை உருவாக்கியுள்ள இச்சட்டத்தில் நீர் நிலைகளையும் நீர்வழிப் பாதைகளையும் தொழிற்சாலைகள் அபகரித்துக் கொள்ளலாம்  என்ற மோசடி சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது தமிழக அரசு‌ எனவும், மேலும் இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட வில்லை என்ற தகவல் உள்ள நிலையில், இந்த சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் எனவும்  நான் ஆட்சிக்கு வந்தால் காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்வேன் என எதிராக போராட்டம் நடத்தி இந்தப் பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்து ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் தற்பொழுது அதானி துறைமுகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தச்சூர் சித்தூர் நெடுஞ்சாலை பணிக்கு துணை போகிறார். விலை நிலங்களை அபகரித்து  தொழில் புரட்சி என்ற பெயரில் கருப்பு பணம் வைத்துள்ள பண முதலைகளுக்கு மாவட்டம் தோறும் முதலீடு செய்கிற கருப்பு சட்டமாக இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், மேலும் இச்சட்டத்தை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் எனவும், பெற்ற சுதந்திரம் பறிபோவதை தடுக்கும் வகையில் விவசாயிகள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அறப்போராட்டம் நடத்த உள்ளோம் என அப்போது அவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here