வலங்கைமான், பிப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம்,  வலங்கைமான் அருகேவுள்ள விருப்பாட்ச்சிபுரம், தாமரை நகரை சேர்ந்தவர் ராஜா.மற்றும் விஜயா தம்பதியனர்,அவர்களுக்கு  தமிழழகன் என்ற மகன் மற்றும் ராகவி, சங்கவி, பைரவி என்ற மூன்று மகள்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

அதில் ராகவி, சங்கவி ஆகிய இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்ட நிலையில், கடந்த 2022- இல் மகன் தமிழழகனுக்கு திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் ஓட்டுநராக பணிபுரியும்.. திருவாரூர் வண்மீகபுரம் பகுதியை சார்ந்த  சிவக்குமார் என்பவரது மகளான சிந்துஜாவை  திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்களது பெற்றோர்கள். விவாகரத்து பெற்ற சிந்துஜாவிற்கு தமிழழகன் இரண்டாவது கணவர் ஆவார்.

இந்த நிலையில், ராஜா தனது மகன் தமிழழகனுக்கு தொழில் செய்வதற்காக 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். தமிழழகன் எந்த தொழிலும் செய்யாமல் ஊதாரி தனமாக அந்த பணத்தை செலவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்து தமிழழகனிடம் அவர்தந்தை ராஜா கேட்டுள்ளார்.

மேலும் தற்பொழுது ராஜாவின் இளைய மகளான பைரவிக்கு  திருமணம் செய்ய முயற்சி செய்து வரும் நிலையில், தமிழழகனுடைய மாமனார் சிவக்குமார், ராஜாவின் வீட்டை, தமிழழகன் மற்றும் மகள் சிந்துஜா ஆகியோருக்கு எழுதி தருமாறு வற்புறுத்தி உள்ளார். ராஜா அதற்கு ஒத்துக் கொள்ளாத நிலையில்.. கடந்த 16. 11. 2023 அன்று ராஜாவை தாக்கியுள்ளதாக தெரிகிறது.

தாக்கப்பட்ட ராஜா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து  சிவக்குமார் மற்றும் அவரது  மருமகன் தமிழழகன், மகள் சிந்துஜா மற்றும் சில அடியாட்கள் உடன் கடந்த 03. 02. 2024 அன்று இரவு ராஜாவின் பூட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து ராஜாவை தாக்கியுள்ளனர்.

தந்தை என்றுகூட பார்க்காமல் தமிழழகன் ராஜாவை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி மிதித்து தாக்கியுள்ளார்..மேலும் சிந்துஜா ராஜாவின் இளைய மகள் பைரவியை தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கியுள்ளார்.

இதுகுறித்து ராஜா மற்றும் குடும்பத்தினர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர்.. ஆனால் இதுவரை வலங்கைமான் காவல்துறையினர் மற்றும் நன்னிலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

அதனால். 12.02.24 இன்று ராஜா அவரது மனைவி விஜயா மற்றும் இளைய மகள் பைரவி ஆகியோர்,  அப்பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

 

பேட்டிகள்:

  1. பைரவி (மகள்)
  2. ராஜா. (தந்தை)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here