திருவாரூர், ஏப். 11 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, சிமிழி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்கள் பயன்பாட்டிலிருந்த இரண்டு குளங்களை தனியார் சிலர் சுமார் ஐம்பது ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமித்து சட்டத்திற்கு விரோதமாக அனுபவித்து வந்த நிலையில், அதனை இன்று சிமிழி ஊராட்சி நிர்வாகம் அதிரடியாக செயல்பட்டு அவ்விருக் குளங்களையும் மீட்டெடுத்து, மீண்டும் அவ்வூர் கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
சிமிழி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அவ்வூர் மக்கள் பயன்படுத்தி வந்த இரண்டு குளங்களை தனியார் சிலர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதனை ஆக்கிரமித்து சட்டத்திற்கு விரோதமாக அனுவித்து வந்த அவ்விரு குளங்களை, அவ்வூர் மக்கள் ஒத்துழைப்புடன் ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இரண்டு குளங்களையும் மீட்டு கிராம பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவர முடிவு செய்தார்.
மேலும் அதனைத்தொடர்ந்து, பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது அரசு உதவியுடன் வட்டாட்சியர் குருநாதன் முன்னிலையில் அவ்விரண்டு குளங்களும் தனியார் ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு சிமிழி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட அவ்விரண்டு குளங்களும் இன்று, காவல்துறை பாதுகாப்புடன் மீன் பாசி குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட தொகை ஊராட்சியின் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பில் இருந்த இரண்டு குளங்களை மீட்டதோடு மட்டுமில்லாமல் தற்போது அந்த இரண்டு குளங்களும் ஏலம் விடப்பட்டு அந்த ஏலத் தொகையானது ஊராட்சியின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்பதால் அந்த ஊர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பேட்டி: சிவசுப்பிரமணியன் ஊராட்சி மன்ற தலைவர்