செங்குன்றம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. அச்சிறப்புமிகு நிகழ்வில் அவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் இரயில் மற்றும் பேருந்துகளில் சிறு தொழில் செய்து வரும் 100 பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் முதலீட்டுக்காக ரூ.1000 மதிப்பிலான தொகுப்பினை அத்தம்பதியர்கள் வழங்கினார்கள். மேலும் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1000 மதிப்பிலான வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஸ்ரீ ஹரி நிவாஸ் குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா – ரேஷ்மா தம்பதியர்களின் மகன் எஸ்.ஆர். ஹேதவ்யாஷ்மன் முதலாமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீகலைமகள் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் 25 வது ஆண்டு வெள்ளி விழாவும் செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் (அருள் அரசன் பேலஸ்) திருமண மண்டபத்தில் ஸ்ரீகலைமகள் டிரான்ஸ்போர்ட் – புளு ஸ்டார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களும் புள்ளிலைன் லயன்ஸ் சங்கத் தலைவருமான லயன் அரி.பிரபாகரன் – லயன் பி.கௌரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் அந்நிகழ்விற்கு லயன் 324 ஜெ மாவட்ட ஆளுநர் பி.பஜேந்திரபாபு, உடனடி ஆளுநர் பி.வி. ரவீந்திரன், முதல் நிலை ஆளுநர் ஏ.டி. ரவிச்சந்திரன், இரண்டாம் நிலை ஆளுநர் பி. மணிசேகர், முன்னாள் ஆளுநர் துளசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், புள்ளிலைன் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், புழல் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.சுப்பிரமணி, திமுக அவைத்தலைவர் ஆர்.செல்வமணி, சி.ஏழுமலை, மாமணி, டி.ரமேஷ், ஆத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சற்குணம், புள்ளிலைன் ஊராட்சி துணைத்தலைவர் கே.மாதவன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மாவை மகேந்திரன், ஜெயக்கொடி, நரசிம்மன், இரா.ஏ.பாபு, சுதாகர், ராஜேஷ், சரவணன், மண்டலத் தலைவர்கள் பரணீதரன், சரஸ்வதி, வட்டாரத் தலைவர் என்.கணேசன், ரஞ்சித் குமார், சுரேஷ் பாலாஜி, சீனிவாசன், என்.சந்திரசேகர், ஆர்.செல்வக்குமார், கவுன்சிலர் என்எம்டி. இளங்கோவன், பவானி சங்கர், கோபி, கா.ஷண்முக சுந்தரம், நண்பன் அபுபக்கர், மந்திரமூர்த்தி, மனோகர், செல்வராஜ், பிரேமலதா, அருள், சாக்ரடீஸ், ராமச்சந்திரன், அருணாச்சலம், டாக்டர் கோபால், பத்மநாபன், தயாளன் மற்றும் புழல் சரவணன் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
பிறந்த நாள் விழா, வெள்ளி விழாவை முன்னிட்டு ரெயில், பேருந்துகளில் விற்பனை செய்யும் பார்வையற்றவர்கள் 100 நபர்களுக்கு தலா ரூ. 1000 மதிப்பீட்டில் கடலை, மிட்டாய், கமர்கட்டு, இஞ்சி முரப்பா உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பைகளை தொழில் செய்து அவர்கள் முன்னேறுவதற்காக வழங்கப்பட்டது. அதே போன்று மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தலா ரூ. 1000 மதிப்புள்ள அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருள்களும் வழங்கினர். ஸ்ரீகலைமகள் டிரான்ஸ்போர்ட்டில் பணிபுரியும் 17 பணியாளர்களுக்கு தலா 1 சவரன் தங்க செயின் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.