மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் நாளான செப் 11 ஆம் நாளை அரசின் சார்பில் இனி ஆண்டு தோறும் மகாகவி நாளாக கடைப்பிடிக்கப் படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை, செப். 10 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப் 11 ஆம் நாள் மற்றும் அவரது மறைந்த நூற்றாண்டு தினத்தில் நினைவைப் போற்றும் வகையில் 14 அறிக்கைகளை வெளியிட்டுவுள்ளார். அதில் பின்வருமாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் செப் 11 ஆம் நாள் அவரது நினைவைப் போற்றும் வகையில் அன்றையத் தினத்தை மகாகவி தினமாக இனி அரசு கடைப்பிடிக்கும். அந்நாளில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி, பாரதி இளங்கவிஞன் விருது மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.
பாரதியாரின் தேர்ந்தெடுக்கப் பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேர்களுக்கு ரூ. 10 கோடி செலவில் வழங்கப்படும்.
மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும் அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத் தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர்களின் நினைவாக அவர்தம் குடும்பத்தார்க்கும் மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி.விசுவநாதன் அவர்களுக்கும், பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் பண முடிப்பும், விருது, பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி அவர்களை கௌரவிக்கப் படும்.
பாரதியின் உருவச்சிலைகள் உருவம் பொறித்த கலைப் பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
பாரதியின் கையெழுத்து பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக் கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களை தேர்வு செய்து தமிழ்நாட்டின் ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும் பாரதியிரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப் படும்.
பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து எட்டையாபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு பாரதியியல் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப் படும்.
உலக தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் நடத்தப் படும்.
திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியிரின் பாடல்கள் மட்டுமே இடம் பெறும் இசைக் கச்சேரி திரையில் பாரதி என்ற நிகழ்வாக நேரு ளு விளையாட்டு அரங்கில் கொரோனா தொற்று பரவல் முழுமையாக ஓய்ந்த பின் நடத்தப் படும்.
பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தி துறையின் சார்பில் நடத்தப்படும்.
திருச்சி பாரதி தாசன் பல்கலை கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப் படும் .
உத்திர பிரேத மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப் படும்.
பாரதியாரின் படைப்புகளை குறும் படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும்.
பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளை பள்ளிகள் கல்லூரிகள் பேரந்து போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்ப ப் படும்.
பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப் படவுள்ள மகளிர் சுயவுதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா எனப் பெயர் சூட்டல் போன்ற 14 அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.