மீஞ்சூர், மார்ச். 20 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கு தேவைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நீறைவேற்றப்பட்டது.
அனுப்பம்பட்டு ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கு உண்டான தேவைகள் குறித்து பள்ளியின் நிர்வாகமும் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து கல்வி வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பித்து உள்ளது.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் அதற்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயா தலைமை வகித்தார். அனுப்பப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு. கூட்டுறவு சங்க தலைவர் சார்லஸ் .உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அனுப்பம்பட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதுக் குறித்தும். விளையாட்டுத் திடல் அமைப்பதற்கும். உடற்பயிற்சி ஆசிரியர்கள் அமைப்பதற்கும். மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு வேண்டி ஆலோசனைகளும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நடைபெற்றது.