செங்கல்பட்டு, ஏப். 26 –
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று 6 மாவட்ட நகராட்சி மற்றும் 4 மாவட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கடந்த 24 ஆம் தேதியன்று நடைபெற்றது.
இக்கருந்தரங்கில் நகராட்சிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும், இக்கருந்தரங்கில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், கடலூர் மாநகராட்சியைச் சேர்ந்த 4 மாவட்ட ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் இக்கருந்தரங்கில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கருத்தரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா, நகராட்சி நிர்வாக இணை ஆணையர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மேலும் இக்கருத்தரங்கில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ல் தெரிவிக்கப்பட்டுள்ள மொத்த குப்பை உற்பத்தியாளர்கள், சேகரித்து தரம் பிரிப்பது, அப்புறப்படுத்துதல் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும், நகர் சாலைகள் அபிவிருத்தி சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.